பாஜகவுக்கு எதிராக செயல்பட்ட பெண் பத்திரிகையாளர் சுட்டுக்கொலை. பெரும் பரபரப்பு

Webdunia
செவ்வாய், 5 செப்டம்பர் 2017 (22:28 IST)
நரேந்திரமோடி தலைமையிலான பாஜக அரசு மத்தியில் பொறுப்பேற்றதில் இருந்தே கருத்து சுதந்திரங்கள் ஒடுக்கப்படுவதாக கூறப்படும் நிலையில் பாஜக மற்றும் இந்துத்துவத்தை கடுமையாக விமர்சனம் செய்து வந்த பிரபல பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் இன்று பெங்களூரில் உள்ள தனது வீட்டில் சுட்டு கொல்லப்பட்டார். இந்த சம்பவம் பத்திரிகையாளர்கள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



 
 
குஜராத் படுகொலை குறித்த விரிவான ஆவணப்படம் ஒன்றை கன்னட மொழியில் வெளியிட்ட லங்கேஷுக்கு அவ்வப்போது கொலை மிரட்டல் வருவது வாடிக்கை. இந்த நிலையில் இன்று பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகரில் உள்ள அவரது வீட்டில் இருந்த போது மர்ம நபர்கள் கதவைத் தட்டியுள்ளனர். கதவை தட்டுவது யார் என்று அவர் கதவைத்திறந்த பார்க்க முற்பட்டபோது திடீரென அவர்கள் துப்பாக்கியால் லங்கேஷை சுட்டு விட்டு தப்பியோடிவிட்டனர்.  துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த நிலையில் கவுரி லங்கேஷ் சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்தார்.
 
இந்த சம்பவம் குறித்து பெங்களூரு போலிசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்