சபரிமலையில் நாளுக்கு நாள் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ள நிலையில் முன்பதிவு எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது.
சபரிமலையில் சுவாமி தரிசன சீசன் தொடங்கியுள்ள நிலையில் பலரும் மாலை போட்டு தினம்தோறும் ஐயப்ப தரிசனத்திற்காக வந்த வண்ணம் உள்ளனர். டிசம்பர் மாத தொடக்கம் முதலாக பக்தர்கள் வருகையால் தரிசனத்திற்கு ஒரு நாளைக்கு 1.20 லட்சம் பேர் முன்பதிவு செய்து தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டிருந்தது.
இதனால் நாள்தோறும் அதிகமான பக்தர்கள் கூட்டம் வருவதால் தரிசன நேரத்தை நீட்டிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. அதனால் இனி ஒருநாளைக்கு முன்பதிவு 90 ஆயிரமாக குறைக்கப்படுவதாக தேவசம்போர்டு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு பக்தர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.