இன்போசிஸ் பிரச்சினைக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்ல! – ஆர்.எஸ்.எஸ் விளக்கம்!

Webdunia
திங்கள், 6 செப்டம்பர் 2021 (09:21 IST)
இன்போசிஸ் நிறுவனம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் செய்தி வெளியான சம்பவம் குறித்து ஆர்.எஸ்.எஸ் விளக்கம் அளித்துள்ளது.

மத்திய அரசின் வருமானவரித்துறை இணையதளத்தை இன்போசிஸ் நிறுவனம் சமீபத்தில் வடிவமைத்து அளித்திருந்தது. ஆனால் அதில் வருமானவரி தாக்கல் செய்வதில் சிக்கல்கள் நீடித்த நிலையில் இதுகுறித்து இன்போசிஸ் நிறுவனத்திற்கு சம்மன் அனுப்பியுள்ள நிதித்துறை செப்டம்பர் 15க்குள் வலைதள பிரச்சினைகளை சரிசெய்ய உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் இன்போசிஸ் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு தரமாகவும், அரசுக்கு மோசமாகவும் சேவைகளை அளிப்பதாக பாஞ்சஜன்யா என்ற இதழில் விமர்சன கட்டுரை ஒன்று வெளியானது, அதில் இன்போசிஸ் போலி செய்தி வெளியிடும் தளங்களுக்கு நிதி உதவி செய்வதாகவும் குற்றம் சாட்டப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த பத்திரிக்கை ஆர்.எஸ்.எஸ் சார்பில் செயல்படும் பத்திரிக்கை என்பதால் அவர்களின் நிலைபாடகவே இந்த கருத்து வெளியிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் இதற்கு விளக்கமளித்துள்ள ஆர்.எஸ்.எஸ் அமைப்பு ”வருமானவரித்துறை தளத்தில் பிரச்சினை இருப்பது உண்மைதான். ஆனால் இன்போசிஸ் இந்தியாவின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிப்பது. பாஞ்சஜன்யா ஆர்.எஸ்.எஸ்சின் அதிகார இதழ் கிடையாது. அதில் உள்ள கருத்துகள் அதை எழுதிய பத்திரிக்கையாளரின் சொந்த கருத்துகளே” என தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்