ரூ.2000 கோடி செலவில் பிரதமர் மோடிக்கு தனி விமானம்

புதன், 22 ஜூன் 2016 (08:47 IST)
பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாட்டு பயணங்களுக்காக ரூ.2000 கோடியில் பிரத்யேக விமானம் வாங்க பாதுகாப்பு துறை முடிவெடுத்துள்ளது. அமெரிக்க அதிபரின் விமானத்துக்கு இணையான வசதிகளைக் கொண்ட புதிய விமானம் வாங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.


 
 
தற்போது பிரதமர் மோடி, ஏர் இந்தியா 747 - 400 மாடல் விமா‌னத்தில் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார். புதிதாக நவீன வசதிகள் மற்றும் அதிக பாதுகாப்புடன் கூடிய போயிங் 777 - 300 ரக விமானத்தை வாங்க பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பரிந்துரைத்துள்ளனர். இதற்கான இறுதி முடிவை வருகிற 25-ஆம் தேதி பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பரிக்கர் தலைமையில் நடைபெற உள்ள பாதுகாப்பு தளவாடங்கள் கொள்முதலுக்கான குழு எடுக்க உள்ளது.
 
பிரதமரின் புதிய நவீன விமானத்தின் சிறப்புகள்:
 
* பிரதமரின் முகாம் அலுவலகம், படுக்கையறை போன்றவை இந்த விமானத்தில் இருக்கும்.
 
* நவீன தகவல் தொழில்நுட்பக் கருவிகள், எதிரி வாகனங்கள், விமானங்களைத் தடுக்கும் ஜாமர் கருவிகள் இந்த புதிய விமானத்தில் இடம்பெறும்.
 
* கையெறி குண்டு மற்றும் ராக்கெட் தாக்குதலால் விமானம் பாதிக்கப்படாத வகையிலும், தாக்கவரும் ராக்கெட் உள்ளிட்ட ஆபத்துகளை முன்கூட்டி கணிக்கும் இந்த விமானத்தில் வசதி இருக்கும்.
 
* 2000 பேருக்குத் தேவையான உணவு இருப்பு வைக்கும் வசதி.
 
* அவசரகாலத்தில் நடுவானில் வேறொரு விமானம் மூலம் எரிபொருள் நிரப்பும் வசதி.
 
* 24 மணி நேர அதிநவீன மருத்துவ வசதி, அறுவை சிகிச்சை அரங்கம், 19 தொலைக்காட்சிப் பெட்டிகள்.
 
போன்ற வசதிகள் பிரதமரின் இந்த புதிய நவீன விமானத்தில் இருக்கும் என கூறப்படுகிறது.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்