திருப்பதிக்கு காணிக்கை கொடுத்த ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் : எவ்வளவு தெரியுமா ?

திங்கள், 26 ஆகஸ்ட் 2019 (15:59 IST)
உலகில் மிகவும் பணக்கார கடவுள் என்று அழைப்படுபவர் திருப்பதி ஏழுமலை வெங்கடேஸவ்ரா கோயில்தான். நாள்தோறும் பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்ய படையெடுத்து வருகின்றனர். அதனால் கூட்டம் அங்கு அலைமோதிக்கொண்டுள்ளது.
இந்நிலையில் வெங்கடேசஸ்வரா கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் காணிக்கை வழங்கி வருகின்றனர். தங்கள் நேர்த்திக் கடன் நிறைவேறவும், அத்ந நேர்த்திக் கடன் நிறைவேறிவிட்டால் அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும் பலர் காணிக்கை வழங்கிவருகின்றனர்.
 
இந்நிலையில் நம் நாட்டில் மிகப்பெரிய தனியார் நிறுவனமாக ரிலையன்ஸ் இண்ட்ஸ்ட்ரீஸ் நிறுவனப் பிரதிநிதி ஒருவர், தங்கள் நிறுவனம் சார்பில் ஒரு கோடியே 11 லட்சம் ரூபாய்க்கான வரைவோலையை நேற்று இக்கோயிலில் காணிக்கையாக அளித்தாகவும்,இதை  திருப்பதி தேவஸ்தான சிறப்பு அதிகாரி ஏ. வி தர்பா ரெட்டி  பெற்றுகொண்டுள்ளார்.
 
மேலும்  அந்த காணிக்கையை திருப்பதியில் வழங்கப்படும் அன்னதாகத் திட்டத்திற்குப் பயன்படுத்தும்படி நன்கொடையாளர் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாக்வும்  நிர்வாகம் தரப்பில் தெரிகிறது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்