இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. இது பற்றி நடிகையும், காங்கிரஸ் முன்னாள் எம்.பி.யுமான ரம்யா கருத்து தெரிவித்த போது “நான் பாகிஸ்தான் சென்றிருக்கிறேன். மனோகர் பாரிக்கர் கூறியது போல் அது நரக நாடு அல்ல. அது ஒரு நல்ல நாடு. அந்த நாட்டு மக்களும் நம்மை போன்றவர்கள்தான்” என்று கருத்து தெரிவித்தார்.
இதுபற்றி கருத்து தெரிவித்த பாஜக நிர்வாகியும், நடிகருமான ஜக்கேஷ் “காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் ரம்யா ஆகியோர் பாகிஸ்தானில் குடியேறட்டும். நம் எதிரி நாடான பாகிஸ்தானை ரம்யா புகழ்வது நல்லதல்ல.