தமிழ்நாட்டில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா, அம்மா உணவகம் என்ற திட்டத்தை கொண்டு வந்தார். இதில் மலிவு விலையில் உணவு மக்களுக்கு வழங்கப்படுகிறது. ஆந்திரா, கர்நாடக மாநிலங்களும் இந்த திட்டத்தை கொண்டுவந்துள்ளன.
ஆந்திராவில் அண்ணா என்.டி.ஆர் என இந்த திட்டத்திற்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. அதேபோல், கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி நடப்பதால் அந்த திட்டத்திற்கு இந்திரா உணவகம் என அம்மாநில முதலமைச்சர் சித்தராமய்யா பெயர் வைத்துள்ளார்.
இந்த திட்டத்தை துவங்கி வைப்பதற்காக காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி இன்று பெங்களூர் வந்திருந்தார். அந்த திட்டத்தை துவக்கி வைத்து பேசிய அவர், இந்திரா உணவகம் என்பதற்கு பதிலாக ‘அம்மா உணவகம்’ என தவறுதலாக குறிப்பிட்டார். இது சமூக வலைத்தளங்களில் கிண்டலடிக்கப்பட்டு வருகிறது.