மீண்டும் நாடாளுமன்றம் வந்தார் ராகுல் காந்தி.. எதிர்க்கட்சி எம்.பி.க்கள் உற்சாக வரவேற்பு

Webdunia
திங்கள், 7 ஆகஸ்ட் 2023 (12:56 IST)
ராகுல் காந்தியின் எம்பி பதவி நீக்கம் ரத்து செய்யப்பட்டதை அடுத்து இன்று அவர் மீண்டும் நாடாளுமன்றத்திற்கு வந்தார். அப்போது எதிர்க்கட்சி எம்பிக்கள் அவருக்கு வரவேற்பு அளித்தனர். 
 
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி குஜராத் நீதிமன்றத்தால் இரண்டு வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் இந்த தண்டனையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். 
 
மேல்முறையீட்டு வழக்கில் ராகுல் காந்தி மீதான தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது. இதனை அடுத்து மக்களவை செயலகம் அவரை மீண்டும் எம்பியாக செயல்பட அனுமதி அளித்தது. 
 
இந்த நிலையில் நான்கு மாதங்களுக்கு பின் தற்போது மீண்டும் ராகுல் காந்தி நாடாளுமன்றம் வந்த நிலையில் அவரை எதிர்க்கட்சி எம்பிக்கள் வரவேற்றனர். மேலும் நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் வாக்களிப்பிலும் ராகுல் காந்தி பங்கேற்க இருக்கிறார் என்றும் தகவல் வெளியாகியுள்ளன.  நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் எதிர்கட்சிகள் சார்பாக முதல் நபராக ராகுல் காந்தி பேச உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்