”விவசாயிகள் குறைகேட்பு”: மகாராஷ்டிராவில் நடைப் பயணத்தை துவக்கினார் ராகுல் காந்தி!

வியாழன், 30 ஏப்ரல் 2015 (15:39 IST)
பருவம் மாறி பெய்த மழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளை, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி இரண்டாவது நாளாக இன்றும் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.
 

 
பாதிக்கப்பட்ட விவசாயிகளின் குறைகளை கேட்டறிவதற்காக பஞ்சாப் மாநிலத்திற்கு கடந்த செவ்வாய் கிழமை ராகுல் காந்தி சென்றார். பயிர்சேதம் குறித்து கேட்டறிந்த அவர் விவசாயிகளிடமிருந்து அரசு கோதுமையை கொள்முதல் செய்யவில்லை என்று குற்றம்சாட்டினார். பஞ்சாப் பயணத்தின் அடுத்தகட்டமாக மகாராஷ்டிரா மாநிலத்திற்கு இன்று சென்றுள்ளார்.
 
விதர்பா பகுதியில் உள்ள அமராவதி நகரில் ராகுல் தனது நடைப் பயணத்தை தொடங்கியுள்ளார். அதனை தொடர்ந்து உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களுக்கும் அவர் செல்ல திட்டமிட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்