இந்த நிலையில் இன்று அவர் தேர்தல் பிரச்சாரத்தில் பிரியங்கா காந்தி பேசியபோது, 400 தொகுதிகளை கைப்பற்றுவோம் என்று பாஜகவினர் கூறுவது சாத்தியமில்லாதது என்றும் முன்கூட்டியே ஏதாவது தில்லு முல்லு வேலை செய்தால் மட்டுமே இது சாத்தியமாகும் என்றும் அவர் தெரிவித்தார்
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் தில்லு முல்லு ஏதும் நடக்காமல் தேர்தல் நடந்தால் பாஜக 180 தொகுதிகளை கூட தாண்டாது என்றும் அவர் கூறியுள்ளார். கடந்த 10 ஆண்டுகளில் எந்த வளர்ச்சியையும் மோடி அரசில் பார்க்கவில்லை என்றும் மக்களுக்கான தனது தொடர்பை மோடி துண்டித்துவிட்டார் என்றும் அதனால் மக்கள் தான் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.