பெங்களூரில் பிறந்த நாள் வாழ்த்து பேனர்கள், அரசியல் தலைவர்களின் பேனர்கள், சினிமா போஸ்டர்கள் போன்றவை பொது இடங்களில் ஒட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறினால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என பெங்களூர் மாநகராட்சி எச்சரித்துள்ளது.
அரசியல் தலைவர்களின் பிறந்தநாள் மற்றும் பண்டிகை காலங்களின் போது பெங்க ளூருவில் உள்ள பொது இடங் களில் போஸ்டர்கள் ஓட்டுவது, பேனர்கள் வைப்பது அதிகரித்து வந்தது. இந்த பேனர் கலாச்சாரத்தால் நகரின் அழகு கெடுவதாகவும், பொதுமக்களுக்கும் மிகுந்த இடையூறு ஏற்படுவதாகவும் புகார்கள் எழுந்தன.
மேலும், சினிமா போஸ்டர்கள் ஆபாசமாக இருப்பதாகவும், அதனால் வாகன ஓட்டிகளின் கவனம் சிதறுவதாகவும் புகார்கள் எழுந்தன. போஸ்டர்களால் வாகன விபத்துக்கள் ஏற்படுவதாகவும், உயர்ந்த பேனர்களால் சாலைகள் மறைக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.