வீட்ல இருக்காம ஊர் சுத்துவியா... விரட்டி விரட்டி வெளுத்த போலீஸ்!!

Webdunia
புதன், 25 மார்ச் 2020 (11:06 IST)
ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தும் அதை மதிக்காமல் ரோட்டில் சுற்றி திரிந்த நபர்களை போலீசார் வெளுத்து எடுத்துள்ளனர். 
 
கொரோனா பரவல் இந்தியாவில் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதுவரை இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 562ஆக அதிகரித்துள்ளது. எனவே நாடு முழுவது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதையும் மீறி மக்கள் பதற்ற நிலையை புரிந்துக்கொள்ளாமல் வெளியே சென்று வருகின்றனர். 
 
மேற்கு வங்கம், தெலங்கானா, ஆந்திர, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் தடையை மீறி வாகனம் ஓட்டி வந்தவர்களை போலீஸார் நிற்க வைத்து அடித்து வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். சில பகுதிகளில் வாகனங்களின் காற்றை பிடுங்கியும், ரோட்டில் தோப்புக்கரனம் போட வைத்தும் தண்டனைகளை வழங்கியுள்ளனர். 
 
பெண்களை பொதுவாக எச்சரிக்கை செய்து அனுப்பினாலும், சில இடத்தில் அவர்களையும் முகத்தை துப்பாட்டாவல் மூட வைத்து தோப்புகரனம் போட வைத்துள்ளனர். கேரளாவிலும் தடையை மீறி வெளியே வந்ததாக 402 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 
 
கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் இதனை கட்டுக்குள் கொண்டு வர அரசு எடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு மக்கள் தங்களது ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்