பாட்னா கூட்டத்தில் அனைத்து ஊழல்வாதிகளும் ஒன்றிணைந்துள்ளனர்: பிரதமர் மோடி
செவ்வாய், 27 ஜூன் 2023 (17:34 IST)
பாட்னா கூட்டத்தில் அனைத்து ஊழல்வாதிகளும் ஒன்றிணைந்துள்ளனர் என பிரதமர் மோடி கடுமையாக விமர்சனம் செய்து உள்ளார்.
ஊழல் தடுப்பு நடவடிக்கையில் இருந்து ஒருவரை ஒருவர் காப்பாற்றிக்கொள்ள பாட்னா கூட்டத்தில் அனைத்து ஊழல்வாதிகளும் கைகோர்த்துள்ளனர் என போபாலில் கட்சி நிர்வாகிகளுடன் நடைபெற்ற கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
மேலும் திமுகவுக்கு வாக்களித்தால் கருணாநிதியின் குழந்தைகள் பேரக்குழந்தைகள் மட்டுமே பயனடைவர் என்றும் தமிழ்நாட்டில் திமுக சட்டவிரோதமாக சொத்துக்களை குவித்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
பீகார் தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் வாரிசு அரசியல் நிகழ்கிறது என்றும் உங்கள் குழந்தைகளுக்கு நல்லது செய்ய வேண்டும் என்றால் பாஜகவுக்கு வாக்களியுங்கள் என்றும் அவர் பேசினார்.