பிரதமர் மோடியின் அரசு பயத்தில் இருக்கிறது - காங்., தலைவர் கார்கே

Sinoj
திங்கள், 11 மார்ச் 2024 (17:49 IST)
விரைவில் மக்களவை தேர்தல் வரவுள்ளது. இதற்காக பாஜக, காங்கிரஸ், திமுக, அதிமுக, உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் பிரசாரம், கூட்டணி, தொகுதிப் பங்கீடு பற்றி பேச்சு வார்த்தை நட்த்தி வருகின்றனர்.
 
இந்த நிலையில்,  இன்று டெல்லி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
 
அப்போது அவர் கூறியதாவது;
 
''தேர்தல் பத்திரம் தொடர்பான விவரங்களை  SBI வெளியிடுவதற்கு  4 மாதம் கால தாமதம் ஏன்? தேர்தல்பத்திரம் குறித்து வெளியிட்டால் யார் எந்தக் கட்சிக்கு எவ்வளவு நிதி அளித்தார்கள் என்ற உண்மை வெளியே வந்துவிடும் என்ற  பயத்தில் இருகிறது பிரதமர் மோடியின் அரசு'' என்று தெரிவித்துள்ளார்.
 
மேலும், ''நாம் அனைவரும்  ஒன்றிணைந்து போராடி ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும், கருத்துச் சுதந்திரச் செயல்கள் முழுவதையும் பிரதமர் மோடியின்  அரசு ஏற்க மறுக்கிறது.  அம்பேத்கர் பற்றி பேசிக் கொண்டு சமூக நீதிக் கொள்கைகள் எதையுமே நடைமுறைப்படுத்தாமல் இருக்கிறது பிரதமர் மோடியின் அரசு. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை கொண்டு மக்களவை தேர்தல் நடைபெறும் பட்சத்தில் 100 சதவீதம் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்ய வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார். 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்