சிறுத்தைகளுக்கு பெயர் சூட்டினால் சிறப்பு பரிசு! – பிரதமர் மோடி அறிவிப்பு!

Webdunia
ஞாயிறு, 25 செப்டம்பர் 2022 (12:53 IST)
இந்தியா வந்துள்ள நமீபியா நாட்டு சிறுத்தைகளுக்கு பெயர் சூட்ட பிரதமர் மோடி பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

பிரதமர் மோடி நாட்டு மக்களுடன் உரையாடும் வானொலி நிகழ்ச்சியான ‘மன் கீ பாத்’ என்னும் மனதின் குரல் நிகழ்ச்சி மாதம்தோறு கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் ஒலிபரப்பாகி வருகிறது.

இந்த மாதத்திற்கான மன் கீ பாத் நிகழ்ச்சி இன்று காலை 11 மணிக்கு ஒளிபரப்பானது. அதில் பேசிய பிரதமர் மோடி “சிறுத்தைகள் இந்தியா வந்துள்ளது குறித்து நாட்டு மக்கள் பலர் தங்களது மகிழ்ச்சிகளை வெளிப்படுத்தி வருகின்றனர். அவற்றை பற்றி பேசுமாறு குறுஞ்செய்திகளையும் அனுப்பி வருகின்றனர்.

ALSO READ: வெளிநாடு வேலைக்கு செல்பவர்கள் உஷார்..? – மத்திய அரசு எச்சரிக்கை!

130 கோடி இந்திய மக்களையும் சிறுத்தைகளின் வருகை ஆனந்தத்தில் ஆழ்த்தியுள்ளது. சிறுத்தைப்புலிகளை கண்காணிக்கும் பணியில் அதிரடி படை ஈடுபடுத்தப்பட்டுள்ளது. நீங்கள் எப்போது சிறுத்தையை பார்வையிடலாம் என்பது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், சிறுத்தைகளுக்கு பெயர் சூட்டுவது மற்றும் அதற்கான பிரச்சாரம் குறித்து பொதுமக்கள் தங்கள் பார்வைகளை பகிர்ந்து கொள்ளும்படியும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். சிறுத்தைகளுக்கு பாரம்பரிய முறைப்படி பெயர் சூட்டினால் சிறப்புடன் இருக்கும் என தெரிவித்துள்ள அவர் சிறந்த கருத்துகளை அளிப்பவர்கள் சிறுத்தை புலிகளை காணும் வாய்ப்பு கிடைக்கும் முதல் நபராகவும் இருக்கலாம் என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்