நாடு முழுவதும் மற்றும் ஜூன் 8ஆம் தேதி முதல் வழிபாட்டுத் தலங்களைத் திறக்கலாம் என ஏற்கனவே மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில் நேற்று முதல் நாடு முழுவதும் பல்வேறு கோவில்கள் திறக்கப்பட்டது என்பது தெரிந்ததே. தமிழகத்தில் எந்த வழிபாட்டு தலங்களும் திறக்கப்படவில்லை என்றாலும், தமிழகத்தின் அண்டை மாநிலமான புதுவையில் உள்ள அனைத்து கோயில்களும் திறக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது
குறிப்பாக திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலில் ஜூன் 30-ஆம் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதி இல்லை என தேவஸ்தானம் அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கேரளாவில் உள்ள பல கோயில்கள் விஸ்வ ஹிந்து பரிஷத் என்ற அமைப்பின் கீழ் இருப்பதால் இதன் நிர்வாகிகள் கோவில்களை திறக்க கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்
இந்த நிலையில் திருவனந்தபுரம் பத்மநாபன் சுவாமி கோவிலும் ஜூன் 8 முதல் திறக்கப்படும் என திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் அறிவித்திருந்தார். ஆனால் இந்த அறிவிப்புக்கு விஷ்வ ஹிந்து பரிட்சத்தின் தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து பத்மநாபசுவாமி கோயிலை மட்டும் திறக்கும் முடிவை திருவாங்கூர் தேவஸ்தான போர்டு ஒத்திவைத்துள்ளது