வாக்கு எந்திரம் வேண்டாம்.. வாக்குச் சீட்டுதான் வேண்டும் – எதிர்க்கட்சிகள் கோரிக்கை

Webdunia
செவ்வாய், 5 பிப்ரவரி 2019 (13:14 IST)
வரும் மக்களவைத் தேர்தலில் வாக்கு எந்திரங்களுக்குப் பதிலாக வாக்குச்சீட்டு முறையினையே மீண்டும் பயன்படுத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்துள்ளன.

கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் வாக்கு எந்திரங்கள் ஹேக் செய்யப்பட்டதாகவும் அதனால் காங்கிரஸ் 201 தொகுதிகளில் தோல்வியடைந்தததாகவும் வாக்கு எந்திர உருவாக்கத்தில் பணியாற்றிய வெளிநாட்டு வாழ் இந்தியர் ஒருவர் லண்டனில அதிர்ச்சியளிக்கும் தகவல் ஒன்றை வெளியிட்டார். இதற்கு மறுப்புத் தெரிவித்த இந்தியத் தேர்தல் ஆணையம், aவருக்கு எதிராக டெல்லி காவல் துறையில் புகார் அளித்துள்ளது.

இதனைச் சுட்டிக்காட்டிய காங்கிரஸ் உள்ளிட்ட 22 எதிர்க்கட்சிகள் தற்போது நடக்க இருக்கும் மக்களவைத் தேர்தலில் மீண்டும் வாக்குச்சீட்டு முறையையேப் பயன்படுத்த வேண்டும் எனவும் இந்திய தேர்தல் ஆணையரிடம் மனு ஒன்றை அளித்துள்ளனர்.

இதுசம்மந்தமாக சமீபத்தில் ராகுல் காந்தி தலைமையில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெற்றது. தற்போது உலகில் ஒரு சில நாடுகளில் மட்டும்தான் வாக்குப்பதிவு இயந்திர முறை பின்பற்றி வருவதாகவும், பெரும்பாலான நாடுகள் வாக்குச்சீட்டு முறைக்கே மாறிவிட்டதாகவும் கூறி தேர்தல் ஆணையரிடம் புகார் அளிக்க இருப்பதாக முடிவு எடுக்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்