இந்த தகவலின் மூலம் நாட்டில் உள்ள அனைத்து மாநில மக்களும் கொரோனா பாதிப்பால் ஒவ்வொரு நாளும் எவ்வளவு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்த தகவலை தினமும் இருவேளை அறிந்து வந்தனர். இந்த நிலையில் சற்று முன் மத்திய அரசு வெளியிட்ட தகவலின்படி இனிமேல் காலை, மாலை என இருவேளைகளில் கொரோனா பாதிப்பு குறித்த எண்ணிக்கை தகவல்கள் வெளி வராது என்றும் காலையில் காலையில் மட்டுமே வெளிவரும் என்றும் அறிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்
காலை, மாலை என இருவேளையும் மத்திய அரசுக்கு கொரோனா பாதிப்பு குறித்த தகவல்களை வெளியிட்டு வந்தபோது நாள் ஒன்றுக்கு காலையில் எத்தனை பேர் மாலையில் எத்தனை பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்த தகவல்களை பொதுமக்கள் அறிந்து வந்தனர். இந்த நிலையில் நாள் ஒன்றுக்கு ஒரு முறை மட்டுமே அறிவிக்கப்படும் என்று அறிவிப்பு பொதுமக்களுக்கும் சுகாதாரத் துறையினர்களுக்கும் ஏமாற்றத்தை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது