டிஜிட்டல் விதிகளை ஏற்பதற்கு கூகுள் சம்மதம்

Webdunia
புதன், 26 மே 2021 (11:50 IST)
இந்தியாவின் கட்டுப்பாடுகளை ஏற்பதற்கான கெடு முடிவடையும் நிலையில் இதனை ஏற்றுக்கொள்ள உள்ளதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

 
மத்திய அரசு கடந்த பிப்ரவரி மாதம் சமூக வலைத்தளங்களுக்கும் ஓடிடி தளங்களுக்கும் புதிய கட்டுப்பாடுகளை விதித்தது. இந்த புதிய கட்டுப்பாடுகள் 3 மாதங்களுக்கு பிறகு அமலுக்கு வரும் என தெரிவித்தது. இந்நிலையில் இந்த கட்டுப்பாடுகளை ஏற்பதற்கான கெடு முடிவடையும் நிலையில் இதனை ஏற்றுக்கொள்ள உள்ளதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. 
 
இது குறித்து கூகுள் செய்தி தொடர்பாளர் மேலும் தெரிவித்ததாவது, இந்தியாவின் சட்டமியற்றும் நடவடிக்கைகளை நாங்கள் மதிக்கிறோம். இந்தியவில் சட்டங்களை மீறும் வகையிலான உள்ளடக்கங்களை நீக்கிய நீண்ட வரலாறு கூகுளுக்கு உண்டு. எனவே இந்த புதிய விதிகளை கூகுள் ஏற்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்