வீட்டில் கழிப்பறை இல்லையென்றால் பஞ்சாயத்து தேர்தலில் நிற்க முடியாது என பாஜக அமைச்சர் ஒருவர் தெரிவித்திருக்கிறார்.
பாஜக அரசு தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் லட்சக்கணக்கான மக்களின் வீடுகளில் கழிப்பறை கட்டுவதில் தீவிரம் காட்டி வருகிறது.
உத்தரகாண்டில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் பஞ்சாயத்து தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாஜக அமைச்சர் அரவிந்த் பாண்டே, பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிடுவோர் வீடுகளில் கட்டாயம் கழிப்பறை இருக்க வேண்டும். இல்லையென்றால் தேர்தலில் போட்டியிட இயலாது என கூறியுள்ளார்.
மேலும் தேர்தலில் போட்டியிருவோருக்கு அதிகபட்சமாக 2 குழந்தைகள் தான் இருக்க வேண்டும் என கூறியிருக்கிறார்.