சீனாவில் இருந்து இந்தியா வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனையா? சுகாதாரத்துறை அமைச்சகம்

வெள்ளி, 10 பிப்ரவரி 2023 (08:05 IST)
சீனா உள்பட ஒரு சில நாடுகளிலிருந்து இந்தியா வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் என கடந்த சில நாட்களுக்கு முன்னால் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்திருந்த நிலையில் தற்போது அதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 
 
சீனா, சிங்கப்பூர், ஹாங்காங், கொரியா, ஜப்பான், தாய்லாந்து  ஆகிய நாடுகளில் இருந்து இந்தியா வரும் விமான பயணிகள் அங்கிருந்து புறப்படும் முன் கொரோனா பரிசோதனை செய்வது கட்டாயம் இல்லை என மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் சற்று முன் தெரிவித்துள்ளது. இதனால் மேற்கண்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 
 
தற்போது சீனா உள்பட ஒரு சில நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்ததை அடுத்து மத்திய சுகாதார அமைச்சகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்