உலகையே முடக்கியுள்ள கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசியை உலக நாடுகளின் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பதில் தீவிரமாக உள்ளனர். இதில் வெற்றிகரமாக சில கட்டங்களை தாண்டிய தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கிற 3-வது இறுதிக்கட்ட மருத்துவ பரிசோதனையும் சில நாடுகளில் தொடங்கியுள்ளது. இந்த சோதனையின்போது தன்னார்வலர்களுக்கு தடுப்பூசி போட்டு சோதிக்கப்படுகிறது. இந்த சோதனைகள் வெற்றிகரமாக தாண்டப்பட்டால் அடுத்த கட்டமாக மக்களுக்கு தடுப்பூசி போடப்படும் என சொல்லப்படுகிறது.