பிரதமர் மோடிக்கு எதிராக அமைச்சர் நிதின் கட்கரி பேசியதாக காங்கிரஸ் பிரமுகர்கள் தங்களது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள நிதின் கட்கரி அவர்களுக்கு வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
சமீபத்தில் நிதின் கட்கரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டிருந்தபோது கிராமங்களில் வளர்ச்சி என்பது இல்லை என்றும் ஆனால் அதே நேரத்தில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கிராம மக்களை மேம்படுத்தும் நோக்கத்தில் வளர்ச்சிக்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்றும் கூறினார்.
ஆனால் காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்ட ஒரு சில தலைவர்கள் அவர் கிராமங்களில் வளர்ச்சி இல்லை என்பதை என்று கூறியதை மட்டும் எடிட் செய்து சமூக வலைதளங்களில் பதிவு செய்த நிலையில் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள கட்கரி கார்கே மற்றும் ஜெயராம் ரமேஷ் ஆகியோர்களுக்கு வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்
இந்த வழக்கறிஞர் நோட்டீஸ் கிடைத்த மூன்று நாட்களில் இருவரும் மன்னிப்பு கூறவில்லை என்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்