உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில் பல்வேறு நாட்டு மக்களும் உக்ரைனில் சிக்கி தவித்து வருகின்றனர். இந்தியாவில் இருந்து உக்ரைனுக்கு படிக்க சென்ற மாணவர்களும் சிக்கி தவித்த நிலையில் அவர்களை அண்டை நாடுகள் வழியாக மீட்டு ஆபரேஷன் கங்கா சிறப்பு விமானங்கள் மூலம் இந்திய அரசு தாயகம் அழைத்து வந்தது.