பொது சிவில் சட்டத்திற்கு பட்டாதாரி இஸ்லாமிய பெண்கள் ஆதரவு: தனியார் நிறுவனத்தின் சர்வே.!

Webdunia
செவ்வாய், 11 ஜூலை 2023 (09:22 IST)
பொது சிவில் சட்டத்தை விரைவில் கொண்டுவர மத்திய அரசு ஆலோசித்து வரும் நிலையில் இந்த சட்டத்திற்கு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த சட்டத்திற்கு படித்த பட்டதாரி பெண்கள் ஆதரவளித்துள்ளதாக தனியார் நிறுவனம் ஒன்று எடுத்த சர்வேயில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
திருமணம், விவாகரத்து, தத்தெடுப்பு மற்றும் வாரிசு உரிமை போன்ற தனிப்பட்ட விஷயங்களுக்காக பொது சிவில் சட்டத்தை ஆதரிக்கிறீர்களா என்று கேட்டதற்கு 68% பட்டதாரி பெண்கள் ஆதரிக்கிறோம் என்று பதிலளித்துள்ளனர்
 
அதேபோல் நான்கு பெண்கள் வரை திருமணம் செய்யும் உரிமை முஸ்லிம் ஆண்களுக்கு இருக்க வேண்டுமா என்ற கேள்விக்கு இல்லை என்று 78% பட்டதாரி பெண்கள் ஆதரவளித்துள்ளனர் 
 
சொத்துக்களுக்கான வாரிசு உரிமை ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமமாக இருக்க வேண்டும் என்று 85 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர். விவாகரத்து பெற்ற தம்பதிகள் எந்த கட்டுப்பாடும் இன்றி மறுமணம் செய்து கொள்ள அனுமதிக்க வேண்டுமா என்ற கேள்விக்கும் ஆம் என்று பதில் அளித்துள்ளார் 
 
இவை அனைத்தும் பொது சிவில் சட்டத்தில் இருப்பதால் இந்த சட்டத்திற்கு படித்த முஸ்லிம் பெண்கள் ஆதரவளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்