மது அருந்திவிட்டு காரை ஓட்டிச் சென்ற தொலைக்காட்சி நடிகர் கைது செய்யப்பட்டார்.
மும்பை சேர்ந்த அன்சுல் பாண்டே. அவருக்கு வயது 29. சமீபத்தில் ஜூகு கடற்கரை சாலையில், போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அன்சுல் பாண்டே, அவ்வழியாக காரில் வந்தார்.
போலீசார் அவரின் காரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அவர் மது அருந்தியிருந்தது தெரிய வந்தது. இதனால், குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக போலீசார் அவரை கைது செய்து ஜூகு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
மேலும், அவர் மது அருந்தியதை உறுதிப்படுத்தும் சோதனைக்காக அவரை, போலீசார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது, தன்னை பரிசோதித்த மருத்துவர்களிடம் அன்சுல் பாண்டே வாக்குவாதம் செய்து, ரகளையில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.