ஆர்.எஸ்.எஸ் இந்துக்களுக்கான இயக்கம் மட்டுமல்ல – மோகன் பகவத் பேச்சு !

Webdunia
வியாழன், 3 அக்டோபர் 2019 (07:49 IST)
ஆர்.எஸ்.எஸ் என்ற இயக்கம் இந்துக்களுக்கானது மட்டுமல்ல தன்னை இந்தியன் என சொல்லிக்கொள்ளும் அனைவருக்குமானது என அதன் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நேற்று முன்தினம் The RSS: Roadmaps for the 21st Century என்ற புத்தக வெளியீட்டு விழாவில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர் ‘ ஆர்.எஸ்.எஸ் என்பது சங்பரிவார் என்றும் இன்னும் சில ஐடியாலஜி என்றும் அழைக்கப்படுகிறது. ஆனால் அவை முழுமையற்றவை. டாக்டர் ஹெட்கேவார்  மற்றும் கோல்வால்கர் போன்றவர்கள் கூட தங்களால் முழுமையாக ஆர்.எஸ்.எஸ்-ஐ புரிந்து கொள்ள முடிந்ததாக குறிப்பிடவில்லை. ஆர்எஸ்எஸ் என்பது இந்தியாவை இந்து தேசமாக்கும் இயக்கம் என்பதில் எந்த மாற்றமும் கிடையாது. ஆனால் ஆர்.எஸ்.எஸ் என்பது தன்னை இந்து என்று சொல்லிக் கொள்பவருக்கு மட்டுமானது அல்ல. தன்னை இந்தியன் என அழைத்துக்கொள்ளும் அனைவருக்குமானது.’ எனத் தெரிவித்துள்ளார்.

சமீபகாலமாக ஆர் எஸ் எஸ் மேல் தவறானப் பிம்பம் வைக்கப்படுவதாகக் கூறி அந்த அமைப்பு வெளிநாட்டு ஊடகங்களை விரைவில் சந்திக்க இருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்