நேற்று உலகம் முழுவதும் மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. இதையடுத்து ஜார்க்கண்ட் மாநில பார்காகோன் சட்டமன்றத் தொகுதி எம் எல் ஏ அம்பா பிரசாத், சட்டசபைக்கு குதிரையில் வந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இது சம்மந்தமான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த மாநிலத்திலேயே இளமையான சட்டமன்ற உறுப்பினர் அம்பா பிரசாத்தான் என்பது குறிப்பிடத்தக்கது.