சிஏஏ சட்டம் அமல்படுத்துவதை யாராலும் தடுக்க முடியாது: அமித்ஷா திட்டவட்டம்

Webdunia
புதன், 29 நவம்பர் 2023 (17:44 IST)
சிஏஏ  சட்டம் அமல்படுத்துவதை யாராலும் தடுக்க முடியாது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.  

மக்களவைத் தேர்தல் அடுத்த ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற பிரம்மாண்டமான பேரணியில் அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டார்.  

மேற்கு வங்க மாநிலத்தை மம்தா பானர்ஜி சீரழித்து விட்டார் என்றும் 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் பாஜக பெரும்பான்மை பெற்று மேற்கொண்டு ஆட்சியைப் பிடிக்கும் என்று தெரிவித்தார்.

மீண்டும் பிரதமராக மோடியை தேர்வு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்வதாகவும் மோடி மீண்டும்   பிரதமர் ஆனவுடன் சிஏஏ சட்டம் அமல்படுத்தப்படும் என்றும் அதை யாராலும் தடுக்க முடியாது என்றும் தெரிவித்தார்.

பல்வேறு தரப்பிலிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பி இருந்ததால் மத்திய அரசு இதுவரை அதற்கான விதிகளை வகுக்க வில்லை என்றும்  இனிமேல் அதற்கான பணிகள் தொடங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்