30 மணி நேர போரட்டம்: காட்டுப்பகுதியில் மனநலமற்ற பெண்ணுக்கு நடந்தது என்ன?

Webdunia
புதன், 21 பிப்ரவரி 2018 (16:36 IST)
மேற்கு வங்க மாநிலத்தில் மனநலமற்ற பெண்ணை காட்டுபகுதியில் வைத்து 4 பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்புணர்வு செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
மேற்க வங்க மாநிலம் தினாஜ்புர் என்ற இடத்தில் உள்ள காட்டுபகுதியில் மனநலமற்ற 35 வயது மதிக்கதக்க பெண் ஒருவரை 4 பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கியுள்ளது. 
 
மேலும், அந்த பெண்ணை இரும்பு கம்பியால் சாகும் அளவிற்கு கொடூரமாக தாக்கியுள்ளனர். பின்னர் அந்த பெண் இறந்ததாக நினைத்து அந்த நால்வரும் காட்டுப்பகுதியில் இருந்து புறப்பட்டு சென்றுள்ளனர். 
 
ஆனால், அந்த பெண் உயிருடன் இருந்த்துள்ளார். சுமார் 30 மணி நேரம் உயிருக்கு போராடிக் கொண்டிருந்துள்ளார். அங்கு தற்செயலாக வந்த மலைப்பகுதி மக்கள் அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மேலும், போலீஸாருக்கும் தகவல் கொடுத்துள்ளனர் 
 
போலீஸார் மேற்கொண்ட தீவிர விசாரணையில், ராம் பிரசாத் சர்மா மற்றும் அகாலு பர்மா ஆகிய இருவரை கைது செய்துள்ளனர். குற்றத்தை ஒப்புக்கொண்ட இவர்கள் மூலம் மேலும் இரண்டு பேரை கைது செய்யும் நடவடிக்கையில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்