திகார் சிறையில் உள்ள அமைச்சருக்கு மசாஜா? துணைமுதல்வர் விளக்கம்

Webdunia
சனி, 19 நவம்பர் 2022 (18:12 IST)
திகார் சிறையில் உள்ள அமைச்சர் சத்யேந்திர ஜெயினுக்கு  மசாஜ் செய்யப்படவில்லை என்று துணைமுதல்வர் சிசோடியா விளக்கம் அளித்துள்ளார்.

டெல்லி யூனியனில் முதல்வர் கெஜ்ரிவால் தலையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடந்து வருகிறது.

இவரது அமைச்சரவையில், ஊழல் நடந்ததாகக் கூறி,  ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடந்த 2017 ஆம் ஆண்டு அமைச்சர் சத்தியேந்தர் ஜெயினுக்கு எதிராக சிபி ஐ வழக்குப் பதிவு செய்தது.  இதையடுத்து, பணமோசடி வழக்கில் சசத்தியேந்தார் ஜெயினுடன் இருவரை கைது செய்து, நீதிமன்ற உத்தரவுப்படி, திகார் சிறையில் அடைத்தனர்.

இந்த  நிலையில், சிறையில் உள்ள சத்தியேந்தர் ஜெயினுக்கு ஒருவர் மசாஜ் செய்யும் வீடியோவை பாஜக செய்தித்தொடர்பாளர்  ஷேஷாத் வெளியிட்டிருந்தார், இது வைரலாகி விமர்சனங்கள் எழுந்துள்ளது.

ALSO READ: சிறையில் உள்ள அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு மசாஜ்..வைரலாகும் வீடியோ
 
இதுகுறித்து,  டெல்லி துணைமுதல்வர் சிசோடியா விளக்கம் அளித்துள்ளார். அதில்,  திகார் சிறையில், அமைச்சர் சத்யேந்திர ஜெயினுக்கு பிசியோதெரபிதான் செய்யப்பட்டது. இது மசாஜ் அல்ல என்று தெரிவித்துள்ளார்.

மேலும், சத்யேந்திர ஜெயினுக்கு முதுகு தண்டில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக அவர் அறுவைச் சிகிச்சை செய்துள்ளார். எனவே அவருக்கு பிசியோதெரபி செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்