மாட்டுப்பாலில் தங்கம் இருக்காமே… அப்ப நகைக்கடன் கொடுங்க – நிதி நிறுவனத்தை திணற வைத்த தனிமனிதன் !

வியாழன், 7 நவம்பர் 2019 (15:24 IST)
பாஜக பேச்சாளர் திலிப் கோஷ் பசும்பாலில் தங்கம் இருப்பதாகக் கூறியதை அடுத்து மேற்கு வங்கத்தில் வினோதமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

சமீபத்தில் மேற்கு வங்கத்தில் நடந்த புர்ட்வானில் நிகழ்ச்சியில் பேசிய பாஜகவைச் சேர்ந்த முன்னணி பேச்சாளர் திலிப் கோஷ் ‘ இந்திய பசுக்களின் பாலில் தங்கம் கலந்துள்ளது. அதனால்தான் அது மஞ்சள் நிறத்தில் உள்ளது. இது மற்ற நாட்டு பசுக்களில் இல்லை. அதனால்தான் பால் ஒரு சிறந்த நோய் தடுப்பு மருந்து. பாலை மட்டுமே குடித்து வேறு உணவு எதுவும் இன்றி ஒருவர் உயிர் வாழமுடியும்.’ எனப் பேசினார்.

திலிப் கோஷின் இந்த பேச்சு இணையவாசிகள் மத்தியில் கேலிகளுக்கும் விமர்சனங்களுக்கும் ஆளானது. இந்நிலையில் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் விவசாயி ஒருவர் தனது இரு மாடுகளை ஓட்டிக்கொண்டு மனப்புரம் நகைக்கடன் நிறுவனத்துக்கு சென்று மாடுகளை வைத்துக்கொண்டு நகைக்கடன் தருமாறு கேட்டுள்ளார். இதனால் அங்கு இருந்த அதிகாரிகள் அதிர்ச்சியாகியுள்ளனர். விவசாயியின் இந்த செயலால் திலிப் கோஷை மீண்டும் சமூக வலைதளங்களில் அனைவரும் கலாய்க்க ஆரம்பித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்