நீல கலர் சட்டை, ஜீன்ஸ் மற்றும் ஸ்னீக்கர்ஸ் அனிந்த அந்த நபர் நாடாளுமன்ற கட்டிடத்தை அடுத்து உள்ள உயர்மட்ட அரசு கட்டிடடங்கள் உள்ள பகுதியில் தூக்கில் தொங்கியது இன்று காலை 7 மணிக்கு பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது.
தூக்கில் தொங்கிய அந்த நபர் 39 வயதான ராம் தயால் வெர்மா மத்திய பிரதேசம் மாநிலம் ஷிவ்பூர் பகுதியை சாந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது. 23 பக்க தற்கொலை கடிதம் ஒன்றும் காவல் துறை வசம் சிக்கியுள்ளது. காவல் துறையின் முதல் கட்ட விசாரணையில் இவர் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டு கடனாளி ஆனவர் என்ற தகவல் கிடைத்துள்ளது.
அவரது உடல் அருகே ஒரு பேக் ஒன்றும் கிடைத்துள்ளது. நான்கு குழந்தைகளுக்கு தனதையான வெர்மா புதன் கிழமைதான் டெல்லி வந்ததாக காவல் துறையினர் தெரிவித்தனர். அனைவரது அதிகமான கவனத்தை ஈர்க்கவே தற்கொலை செய்த வெர்மா பாராளுமன்றம், குடியரசு தலைவர் மாளிகை என உயர் அரசு கட்டிடங்கள் உள்ள இந்த இடத்தை தேர்வு செய்ததாக கூறப்படுகிறது.