மேற்குவங்க ஆளுநர் மீது பணிப்பெண் பாலியல் புகார்..! 4 பேருக்கு சம்மன்..!

Senthil Velan

சனி, 4 மே 2024 (16:51 IST)
மேற்குவங்க ஆளுநர் ஆனந்த போஸ் மீதான பாலியல் புகார் தொடர்பாக, ஆளுநர் மாளிகை ஊழியர்கள் 4 பேருக்கு சிறப்பு புலனாய்வுக் குழு சம்மன் அனுப்பி உள்ளது.
 
தமிழகத்தை போன்று மேற்கு வங்கத்திலும் ஆளுநருக்கு முதல்வர் மம்தா பானர்ஜிக்கும், இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. மம்தா அரசு மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை ஆளுநர் ஆனந்த போஸ்  முன்வைத்து வருகிறார்.
 
இந்நிலையில் ஆளுநர் மாளிகையில் பணியாற்றும் தற்காலிக பெண் பணியாளர் ஒருவர், போலீசில் புகார் ஒன்றை அளித்தார். அதில், ஆளுநர் ஆனந்த போஸ் தன்னிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சித்ததாக குறிப்பிட்டுள்ளார். 
 
இந்த குற்றச்சாட்டை ஆனந்த போஸ் திட்டவட்டமாக மறுத்துவிட்டார். இந்நிலையில் ஆளுநர் மாளிகையில் உள்ள  சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி, சிறப்பு புலனாய்வுக் குழு தீவிர விசாரணை நடத்தி வருகிறது. 

ALSO READ: கும்பகர்ண தூக்கத்தில் இருக்கிறது திமுக ஆட்சி..! ஜெயக்குமார் மரணம் குறித்து இபிஎஸ் விமர்சனம்..!!
 
பாலியல் புகார் தொடர்பாக, மேற்கு வங்க ஆளுநர் மாளிகை ஊழியர்கள் 4 பேருக்கு சிறப்பு புலனாய்வுக் குழு சம்மன் அனுப்பி உள்ளது. சம்மனில் மேற்கு வங்க மாநிலத்தில் ஹரே தெரு காவல் நிலையத்தில் 4 பேரும் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்