சற்றும் எதிர்பாராத விவசாயிகள் பேரணி; அதிர்த்த மகாராஷ்டிரா

Webdunia
ஞாயிறு, 11 மார்ச் 2018 (14:29 IST)
கடனை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி மகாராஷ்டிரா மாநிலத்தில் மாபெரும் விவசாயிகள் பேரணி நடைபெற்று வருகிறது.

 
மகாராஷ்டிரா மாநிலத்தில் விவசாயிகள் கடுமையான வரட்சியால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தங்களது கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி பாரதிய கிசான் சபா என்ற விவசாய அமைப்பு பேரணி நடத்தினர். நாசிக் மாவட்டத்தில் இருந்து மும்பை நோக்கி சென்று சட்டசபையை முற்றுகையிடும் போராட்டம் நடத்த முடிவு செய்தனர்.
 
கடந்த 6ஆம் தேதி 100 விவசாயிகள் இணைந்து தங்களது பேரணியை தொடங்கினர். இதைத்தொடர்ந்து இவர்களது பேரணியை கண்ட மற்ற விவசாய அமைப்புகளும் இவர்களுடன் இணைந்தனர். அரசியல் கட்சிகளும் இவர்களது பேரணிக்கு ஆதரவு அளித்துள்ளனர். இந்நிலையில் தற்போது இந்த பேரணியில் 30 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் உள்ளனர்.
 
இந்த மாபெரும் பேரணியை சற்றும் எதிர்பாராத மகாராஷ்டிரா மாநிலம் அதிர்ந்துள்ளது. மும்பை தேசிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மகாராஷ்டிரா மாநில விவசாயிகளின் மாபெரும் பேரணி மற்ற மாநில விவசாயிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்