இது ஒரு விஷயமே இல்லை... பெரும்பான்மையை நிரூபிப்பது குறித்து ஷிண்டே!

வெள்ளி, 1 ஜூலை 2022 (12:06 IST)
வரும் திங்கட்கிழமை ஏக்நாத் ஷிண்டே பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் குறிப்பிட்டுள்ளார். 

 
மகாராஷ்டிராவில் கடந்த சில நாட்களாக பெரும் சலசலப்பு ஏற்பட்டது என்பதும் ஏக்நாத் ஷிண்டே திடீரென தனது ஆதரவாளர்களை வைத்து உத்தவ் தாக்கரே ஆட்சியை கவிழ்த்தார். இதனைத்தொடர்ந்து மகாராஷ்டிர மாநில முதலமைச்சராக ஏக்நாத் ஷிண்டே பதவி ஏற்றுக்கொண்டார். இதனை அடுத்து அவருக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்களை தெரிவித்தார். 
 
இதனைத்தொடர்ந்து மராட்டிய மாநில முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி உத்தரவிட்டுள்ளார். வரும் திங்கட்கிழமை ஏக்நாத் ஷிண்டே பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் குறிப்பிட்டுள்ளார். 
 
மகாராஷ்டிர முதல்வர் பதவியை சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவிடம் இருந்து பறித்த மூன்றே நாட்களில், ஏக்நாத் ஷிண்டே மகாராஷ்டிரா சட்டசபையில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்கிற கட்டாயத்தில் உள்ளார். 
 
இந்நிலையில் புதிய முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, பெரும்பான்மையை நிரூபிப்பது என்பது ஒரு சம்பிரதாயம் மட்டுமே என்றும் தனது அரசாங்கம் அந்த தேர்வில் வெற்றி பெறும் என்றும், தனக்கு 175 எம்எல்ஏக்கள் ஆதரவு இருப்பதாகவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
 
ஷிண்டே தனது வெற்றியை முன்னாள் முதலமைச்சரும் பாஜக தலைவருமான தேவேந்திர ஃபட்னாவிஸின் மாஸ்டர் ஸ்ட்ரோக் என்று கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்