அமைச்சரையே டார்ச்சர் செய்த லோன் ஆப் கும்பல்: ஆந்திர போலீசார் அதிரடி நடவடிக்கை!

Webdunia
வெள்ளி, 29 ஜூலை 2022 (18:10 IST)
லோன் மூலம் கடன் பட்டவர்கள் டார்ச்சர் செய்யப்பட்டு வருகின்றனர் என்பதும் சிலர் டார்ச்சர் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டு வரும் அவலமான சம்பவங்களும் நடந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்
 
இந்த நிலையில் ஆந்திர மாநிலத்துக்கு அமைச்சர் ஒருவரையே லோன்ஆப் கும்பல் டார்ச்சர் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 
 
கடன் வாங்கிய நபர் ஒருவரின் செல்போன் காண்டாக்டில் ஆந்திர அமைச்சர் கோவர்தன் பெயர் இருந்ததை அடுத்து அவருக்கு லோன்ஆப் கும்பல் 50க்கும் மேற்பட்ட முறை போன் செய்து டார்ச்சர் செய்துள்ளனர் 
 
இந்த நிலையில் லோன் ஆப் கும்பல் மீது அமைச்சர் கோவர்தனன் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை செய்தபோது சென்னை திருமங்கலத்தில் இயங்கிய கால் சென்டர் ஒன்றில் இருந்துதான் இந்த கும்பல் செயல்பட்டது என்பது தெரியவந்தது. இதனை அடுத்து இந்த கால் சென்டரில் உள்ள ஒரு சிலரை விசாரணை செய்து நெல்லூருக்கு அழைத்து சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்