நள்ளிரவில் கிரண்பேடி செய்த வேலையால் அதிர்ந்த புதுச்சேரி!

சனி, 19 ஆகஸ்ட் 2017 (17:48 IST)
புதுவை ஆளுநர் கிரண் பேடி இரவு நேரத்தில் பெண்களுக்கு போதுமான பாதுகாப்பு உள்ளதாக என்பதை நேரடியாக சென்று ஆய்வு செய்த வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


 

 
புதுச்சேரி ஆளுநர் கிரண் பேடி இரவு நேரங்களில் பெண்களின் பாதுகாப்பு எப்பாடி இருக்கிறது என்பதை அறிய மாறுவேடத்தில் சென்று ஆய்வு செய்துள்ளார். நேற்று நள்ளிரவு ஆளுநர் மாளிகை ஊழியர் ஆஹா குப்தா என்பவருடன் இருசக்கர வாகனத்தில் புதுவையை வலம் வந்துள்ளார். பேருந்து நிலையம் உட்பட சில முக்கிய பகுதிகளில் ஆய்வு செய்துள்ளார். 
 
மேலும் பெண்களின் பாதுகாப்பு போதுமான அளவில் இருக்கிறது என்றும் சில இடங்களில் பாதுகாப்பு நடவடிக்கையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இரவு நேரத்தில் ஆய்வு செய்த வீடியோவை கிரண் பேடி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்