தென் கொரியாவின் மீன்வளத்துறை அதிகாரி ஒருவரை வடகொரியா அதிகாரிகள் சுட்டுக்கொன்றதாக செய்திகள் வெளியாகின. இது சம்மந்தமாக தென் கொரியா வடகொரியாவைக் கடுமையாகக் கண்டனம் செய்தது. இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் தென்கொரிய மக்களிடம் மன்னிப்புக் கேட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.