ஜிஎஸ்டி வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து கேரள மாணவிகள் நிதியமைச்சர் அருண் ஜெட்லிக்கு சானிடரி நாப்கினை பார்சல் அனுப்பியுள்ளனர்.
ஜிஎஸ்டி வரி நாடு முழுவதும் ஜூலை 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது. இதனால் சில பொருட்களின் விலை குறைந்துள்ளது. சில பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. ஜிஎஸ்டி வரியின்படி பெண்கள் பயன்படுத்தக்கூடிய சானிடரி நாப்கினுக்கு 12% வரி விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு நாடு முழுவதும் பெண்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து மத்திய நிதியமைச்சகம், ஜிஎஸ்டி முன் 13.68% வரி இருந்ததாகவும். தற்போது ஜிஎஸ்டியின் கீழ் 12% வரி விதிக்கப்பட்டுள்ளது என விளக்கம் அளித்துள்ளது. ஆனால் ஜிஎஸ்டி வரி விதிப்புக்கு முன் ரூ.3.33 வரை ஒரு நாப்கின் உற்பத்தின் செய்ய செலவாகியுள்ளது. ஆனால் ஜிஎஸ்டி பின் ஒரு நாப்கின் தயாரிக்க ரூ.8 வரை செலவாகும் என தெரிவித்துள்ளனர்.
காண்டமுக்கு ஜிஎஸ்டி வரியில் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த சானிடரி நாப்கினுக்கு மட்டும் 12% வரி விதிக்கப்பட்டுள்ளது என நாடு முழுவதும் பெண்கள் குரல் எழுப்பியுள்ளனர். மேலும் ஜிஎஸ்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து கேரள இடதுசாரி மாணவர் அமைப்பினர் கல்லூரி வளாகங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் போராட்டத்தின் ஒருபகுதியாக நிதியமைச்சர் அருண் ஜெட்லிக்கு சானிடரி நாப்கினை பார்சல் அனுப்பியுள்ளனர்.