நிபா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் நிலை என்ன? கேரள அமைச்சர் தகவல்

Webdunia
வெள்ளி, 29 செப்டம்பர் 2023 (15:20 IST)
கேரளாவில் நிபா வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 4 பேர் நிலை என்ன என்பது குறித்து அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.
 
கடந்த ஆகஸ்ட் மாதம்  கேரளாவில் 4 பேர்களுக்கு நிபா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். 
 
நிபா வைரஸ் பரவல் காரணமாக பொது இடங்களில் முகக்கவசம் அணிவது, பள்ளி, கல்லூரிகளுக்கு ஆன்லைனில் வகுப்புகள் நடத்துவது போன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. 
 
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ், நிபா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த 4 பேரும் குணமாகிவிட்டதாகவும், அவர்களுக்கு 2  முறை மருத்துவப் பரிசோதனை செய்ததில், 2 முறையுமே நிபா வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டுவிட்டதாகவும் தெரிவித்தார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்