தனது ஒருமாத ஊதியத்தை கேரள மக்களுக்கு வழங்கிய ஆளுநர்
சனி, 11 ஆகஸ்ட் 2018 (16:36 IST)
கேரள ஆளுநர் சதாசிவம் தனது ஒருமாத ஊதியத்தை கேரள மக்களுக்கு வெள்ள நிவாரண நிதியாக வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
கேரளாவில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவு கனமழை பெய்து வருவதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். நகரமெங்கும் வெள்ள நீர் புகுந்துள்ளது.
பல வீடுகளில் வெள்ள நீர் புகுந்தும், பல வீடுகள் வெள்ளத்திலும் அடித்து செல்லப்பட்டுள்ளன. வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது.
கனமழையின் காரணமாக கேரளாவில் உள்ள 24 அணைகள் நிரம்பிவிட்டன. அணையின் பாதுகாப்பு கருதி தண்ணீர் அதிக அளவில் வெளியேற்றப்படுகிறது. இதனால் 8 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கேரள மாநில ஆளுநர் சதாசிவம் தனது ஒருமாத ஊதியம் ரூ.1 லட்சம் கேரள மக்களுக்கு வெள்ள நிவாரண நிதியாக வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.