இதுகுறித்து அமைச்சர் சுதாகர் கூறுகையில், "தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் மாணவ, மாணவிகள் தங்களின் தனிப்பட்ட உடைகளை அணிந்து கொள்ள அனுமதி வழங்கப்படும். மாணவிகள் ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத விரும்பினால், அதற்கு அனுமதி வழங்கப்படும்" என்று கூறினார்.
கர்நாடகாவில் கடந்த 2022 ஆம் ஆண்டு, பள்ளிகளில் ஹிஜாப் அணிந்து வர அனுமதி வழங்கக் கோரி முஸ்லிம் மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் மாநிலம் முழுவதும் பரவிய நிலையில் கர்நாடக உயர்நீதிமன்றம், பள்ளிகளில் மத அடையாள அணிகளை அணிந்து வர தடை விதித்தது. இந்தத் தீர்ப்பால் முஸ்லிம் மாணவிகள், தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் ஹிஜாப் அணிந்து எழுத முடியாத நிலையில் இருந்தனர்.