கர்நாடக முதல்வரை மிரட்டிய மடாதிபதி ! அரசியலில் பரபரப்பு !

Webdunia
புதன், 15 ஜனவரி 2020 (14:55 IST)
கர்நாடக முதல்வர் எடியூரப்பாவை பொது மேடையில் மடாதிபதி ஒருவர் மிரட்டிப் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கர்நாடக மாநிலம் தாவணகெரே நகரில் உள்ள பஞ்சமாஷாலி சமுதாயத்தினரின் மாநாடு இன்று நடைபெற்றது.  இந்த நிகழ்ச்சியில் அம்மாநில முதல்வர் எடியூரப்பா கலந்து கொண்டார். 
 
விழாவின் மேடையில் பேசிய பஞ்சமாஷாலி மடத்தின் மடாதிபதி வச்சதானந்தா குருஜி, தங்கள் சமூதாயத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏ முருகேஷ் நிரானிக்கு அமைச்சர் பதவி வழங்காமல் இருந்தால், உங்களை எங்கள் சமுதாயம் புறக்கணிந்துவிடும் என மிரட்டல் விடுக்கு தொனியில் பேசினார்.
 
அதைக்கேட்ட முதல்வர் எடியூரப்பா தனது இருக்கையை விட்டு எழுந்து, இதுபோல்  பேச வேண்டாம் என கோபத்துடன் மடாதிபதி வச்சதானந்தாவிடம் தெரிவித்தார்.
 
மேலும், தன்னை முதலமைச்சர் பதவியில் அமரவைக்க 17 பேர் தங்களது எம்.எல்.ஏ பதவிகளை ராஜினாமா செய்தார்கள் எனவும் அவர்களுக்கு துரோகம் செய்ய முடியாது எனவும் தெரிவித்தார்.
 
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்