தமிழ்நாட்டை மட்டும் குறிவைப்பது ஏன்? நீதிமன்றத்தில் வழக்கறிஞர் கபில் சிபல் கேள்வி..!

Siva
வியாழன், 25 ஜனவரி 2024 (15:04 IST)
இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் அமலாக்கத்துறை வழக்குகள் நிலுவையில் இருக்கும் நிலையில் தமிழ்நாட்டை மற்றும் குறிவைப்பது ஏன் என நீதிமன்றத்தில் வழக்கறிஞர் கபில்சிபல் கேள்வி எழுப்பி உள்ளார்.  
 
அமலாக்கத்துறை  உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் கேள்வி எழுப்பிய போது உத்திரபிரதேசம் மத்திய பிரதேசம் உள்ளிட்ட பாஜக ஆளு மாநிலங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் மீது அமலாக்கத்துறை எந்த விசாரணையும் நடத்தாதது ஏன் என்று கேட்டார்.
 
அசாம் மாநில முதலமைச்சர் மீது எப்.ஐ.ஆர் இருக்கும் நிலையில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தாதது ஏன்?  பண மோசடி என்பது  குற்றமாகும் அது குற்றத்தின் விளைவு அல்ல எனவே பண மோசடி இல்லாமல் ஒரு வழக்கின் விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு எப்படி உரிமையுள்ளது 
 
எந்த குற்ற வழக்கின் அடிப்படையில் தமிழ்நாட்டில் மணல் குவாரி வழக்குகளை அமலாக்கத்துறை விசாரிக்கிறது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்