இந்நிலையில் ஜல்சக்தி அமைச்சகம் ஒரு புகைப்படத்தை தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளது. மேகாலயாவில் உள்ள உம்ங்கோட் என்ற அந்த நதி கண்ணாடி போல தெளிவாக உள்ள நிலையில் அதில் காற்றில் மிதப்பது போல பயணிகள் படகுகளில் செல்கின்றனர். இந்த புகைப்படத்தோடு ” மேகாலயா மாநிலத்தில் ஷில்லாங் நகரிலிருந்து 100 கிமீ தொலைவில் உம்ங்கோட் நதி உள்ளது. இதில் தண்ணீர் சுத்தமாகவும், தெளிவாகவும் உள்ளதால், இந்த படகு காற்றில் இருப்பது போல் தெரிகிறது; நமது நதிகள் அனைத்தும் சுத்தமாக இருக்க வேண்டும். மேகாலயா மக்களுக்கு ஹாட்ஸ் ஆஃப்” என்று ஜல்சக்தி அமைச்சகம் பதிவிட்டுள்ளது.