தேர்வு நடத்த மறந்த ஜபல்பூர் பல்கலைக்கழகம்!

Sinoj

புதன், 6 மார்ச் 2024 (20:04 IST)
மத்திய பிரதேசம் மாநிலத்தில் இயங்கி வரும் ஒரு பல்கலைக்கழகவே தேர்வு  நடத்த மறந்த சம்பவம் நடந்துள்ளது.

நாட்டில் பல பல்கலைக்கழங்கள், கல்லூரிகள், பள்ளிகள் இயங்கி வருகின்றன.
 
இந்தப் பல்கலைக்கழகங்களில் செமஸ்டர் தேர்வு நடத்தப்படுவது வழக்கம். பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அனைத்துக் கல்லூரிகளும் இங்கிருந்து தேர்வுத்தாள், தேர்வு நடக்கும்  தேதி, ரிசல்ட், தேர்வுக் கட்டணம் ஆகியவை அறிவிப்புகளாக வெளியாகும்.
 
இந்த நிலையில்,மத்திய பிரதேசம் மாநிலத்தில் இயங்கி வரும் ஒரு பல்கலைக்கழகமே தேர்வு  நடத்த மறந்த சம்பவம் நடந்துள்ளது.
 
மத்திய பிரதேசம் மாநிலம் ஜபல்பூர் பல்கலைக்கழகத்தில் செமஸ்டர் தேர்வுகளுக்கான கால அட்டவணை மற்றும் ஹால் டிக்கெட் ஆகியவை மாணவர்களுக்கு வழங்கப்பட்ட நிலையில், தேர்வு நடத்துவதற்கு மறந்துபோனதாக கூறப்படுகிறது.
 
மேலும், எம்.எஸ்.சி மாணவர்கள் தேர்வு எழுதச் சென்றபோது, தேர்வு நடக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து  விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்