வியாழனை விட பெரிய நட்சத்திரம்..! – இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!

Webdunia
வியாழன், 18 நவம்பர் 2021 (09:45 IST)
வியாழனை விட பெரிதான நட்சத்திர கோள் ஒன்றை இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ வானியல் ஆய்வுகள் பலவற்றை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் ஆமதாபாத்தில் உள்ள இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வு கூட விஞ்ஞானிகள் வியாழனை விட பெரிய நட்சத்திரம் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். விண்வெளியில் 725 ஒளி ஆண்டுகள் தூரத்தில் இது உள்ளதாக கூறப்பட்டுள்ளதி.

இதை விஞ்ஞானிகள் 1.2 மீட்ட நீளம் கொண்ட தொலைநோக்கியால் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் இந்த ஆண்டு மார்ச் மாதம் வரை ஆய்வு செய்துள்ளனர். வியாழனை விட 1.4 மடங்கு பெரிதாக உள்ள அதன் தரைதளம் மிகவும் வெப்பமாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இது ஆமதபாத் ஆய்வு மையத்தால் கண்டறியப்பட்ட இரண்டாவது கோள் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்