மோடியை குரங்குடனும், கழுதையுடனும் ஒப்பிட்ட மம்தா பானர்ஜி

வியாழன், 8 மே 2014 (15:38 IST)
மேற்கு வங்க முதலமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி, மோடி கழுதையா? என கேட்டு அவரை தொடர்ந்து கடுமையாக சாடிவருகிறார்.  
 
பாஜகவின் பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதலமைச்சருமான நரேந்திர மோடியை மேற்கு வங்க முதலமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி பொதுக்கூட்டங்களில்  கடுமையாக திட்டி பேசி வருகிறார். 
 
இந்நிலையில், தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய அவர், மோடி இங்குள்ள மக்களை வெளியேற்றவேண்டுமென பேசிவருகிறார். மக்கள் மத்தியில் உள்ள வேறுபாடுகளை சுட்டிக்காட்டி கலவரத்தை ஏற்படுத்த திட்டமிடும் மோடிக்கு நாட்டின் பிரதமராவதற்கு எந்த தகுதியும் இல்லை.
 
நான் மத்தியில் ஆட்சிபுரிந்திருந்தால் இவ்வாறு பேசுபவரை கயிற்றால் கட்டி தெருவில் நடக்கவைத்திருப்பேன். மேற்கு வங்கத்தை இழிவாக பேசினால் நான் அமைதியாக இருக்கமாட்டேன். அவரென்ன கழுதையா?  
 
இலங்கையில் குரங்கு வாலில் தீ வைத்தனர். அது அனைத்து இடங்களையும் சுற்றி வந்து தீக்கிரையாக்கி விட்டது. அது போல இவர் வாலில் தீயுடன் அலைந்து பிரிவினை ஏற்படுத்தும் வகையில் பேசி வருகிறார் என மம்தா பானர்ஜி பேசினார். 
 

வெப்துனியாவைப் படிக்கவும்