கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. எனினும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. கடந்த 24 மணி நேரத்தில் 2,73,810 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 1,50,61,919 ஆக உயர்ந்துள்ளது.
ஒரே நாளில் 1,619 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 1,78,769 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,29,53,821 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 19,29,329 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தியாவில் தற்போது கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய இரு தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. இவ்விரு தடுப்பூசிகளும் 2 டோஸ் எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால், தற்போது 2 டோஸ் தடுப்பூசி போட்ட பிறகு நோய் எதிர்ப்பு பொருள் செறிவு நிலை என்ன, எவ்வளவு காலம் கழித்து ஒரு குறிப்பிட்ட அளவுக்கு அது கீழே வந்து, மூன்றாவது டோஸ் (பூஸ்டர் டோஸ்) தேவைப்படும் என்பதை முடிவு செய்ய வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.